வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசப் பிரதிநிதிகளுடன் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் சந்திப்பு


பரந்தனில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு விஜயம் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சமாசத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மீள் குடியேற்றத்தின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் சங்கத்தின் தேவைகளைப் பற்றியும் எதிர்கால நடவடிக்கை பற்றியும் தெரிவிப்பதற்காக சங்கத்துக்கு விஜயம் செய்யுமாறு சங்கப்பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முருகேசு சந்திரகுமார் கடந்த (12) விஜயம் செய்திருந்தார்
அங்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்ற சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட பிரதேசத்தின் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொழிலுக்கான அனுமதி கடனுதவி தொழில் உபகரணங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அனுமதி போன்ற விடயங்கள் தொடர்பாக சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தார்.
இதற்குப் பதிலளித்த திரு. சந்திரகுமார் எம். பி அவர்கள் மிக விரைவில் தொழிலுக்கான அனுமதியை பெற்றுத்தரக் கூடியதாக இருக்கும் என்றும் இயல்புநிலையில் தொழில் செய்யக் கூடிய நிலையை உருவாக்குவதில் தொழிலாளர்களும் சங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த கட்டங்களில் சமாசம் முன்வைத்த விடயங்கள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இச் சந்திப்பின்போது கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் பொது முகாமையாளர் திரு. கணேசபிள்ளை சமாசத்தின் செயலாளர் திரு. பொன். நித்தியானந்தன் சமாசத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’