அநாமதேயக் கடிதத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு விரோதமானது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்திற்கு அருகில் ஆயுதங்களுடன் நடமாடினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பியின் சாவகச்சேரிப் பிரதேச அமைப்பாளர் சாள்ஸ் கைது செய்யப்பட்டமை தொடர்பாக லண்டன் பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் அநாமதேயக் கடிதத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு விரோதமான செயல். அந்த வகையில் அவர்களது குடும்பத்தினர் அடிப்படையுரிமை மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். அநாமதேயக் கடிதத்தை வைத்துக் கொண்டு இப்படி நடவடிக்கை எடுப்பதென்பது எங்கும் நடப்பதில்லை. ஆனால் இங்கு பல விநோதங்களில் இதுவும் ஒரு விநோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சாள்ஸ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர். அவரை அழைத்து நீங்கள் விசாரித்து உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் பொலிஸாரிடம் சொல்லியிருக்கின்றேன். இதுவரை அப்படி பொலிஸாரும் என்னிடம் கதைக்கவும் இல்லை. அப்படி நடந்ததாகவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாவகச்சேரி நீதிமன்ற பதிவாளரினால் 30.04.2010 அன்று விலாசமிடப்பட்ட கடிதம் தனக்கு நேற்றே கிடைத்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’