வட்டுக்கோட்டை, சங்கரத்தையில் வீட்டிலிருந்த குடும்பஸ்தரை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்கள் அழைத் துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது படுகாயமடைந்த சம்பந்தப்பட் டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணி யளவில் நடைபெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த குடும்பஸ்தரான புலேந்திரன் (வயது34) என்பவர் தனது வீட்டில் அம் மன் கோயில் வைத்து சாத்திரம் மற்றும் "பார்வை' பார்த்துக் குறி சொல்பவர் ஆவார்.
இவரது வீட்டிற்கு நேற்றிரவு 8 மணிக்கு வெள்ளை வானில் சென்ற 9 பேர் தமது நெருங்கிய உறவினர் ஒருவர் சுகயீனமுற்றி ருப்பதாகவும் அவரை தமது வீட்டுக்கு வந்து பார்வையிடுமாறு கூறி வானில் அழைத் துச் சென்று சங்கானை வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கடுமையாகத் தாக்கி யுள்ளனர்.
மீண்டும் வானில் ஏற்றிச்சென்று அவரது வீட்டுக்கு அருகில் வைத்துத் தாக்கிய போது தாக்கப்பட்டவர் சத்தமிட அயலவர்கள் கூடியபோது அந்த இடத்தை விட்டு தாக்கு தல் நடத்தியோர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸா ரிடமோ இராணுவத்தினரிடமோ எதுவும் தெரிவிக்கக் கூடாது எனவும் வெள்ளை வான் கும்பலினர் மிரட்டிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’