இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் சென்று கொண்டிருந்த குண்டு துளைக்காத வாகனத்தை மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் நிலக்கன்னிவெடி மூலம் தாக்குதல் நடத்தியதில் துணை ராணுவப் படையின் 7 வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
நிலக்கன்னிவெடி தாக்குதலை நடத்திய பின்னர் துப்பாக்கிகள் மூலமும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக காவல் துறைத் தலைவர் விஷ்வராஜன் தெரிவித்தார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு மாதம் முன்னதாக, மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 76 பேர் கொல்லப்பட்ட பின்னர் அங்கு நடத்தப்பட்டுள்ள பெரிய தாக்குதல் இதுவாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’