வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 மே, 2010

இலங்கை வீரர்கள் தலாய்லாமாவை சந்திக்கத்தடை


 குமார் சங்ககர


 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காராவும், மஹேல ஜயவர்த்தனவும் திபெத்திய மதத்தலைவரான தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை தடுத்துள்ளது.
இந்திய பிரிமியர் லீக் குழுவினர் மரியாதையின் நிமித்தம் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவை சந்திக்கவிருந்த போது அவர்களுடன் இந்த இலங்கை ஆட்டக்காரர்கள் இருவரும் அதில் கலந்துகொள்ளவிருந்தனர்.
ஆனால், அவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை விளையாட்டு அமைச்சின் ஊடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சின் உத்தரவு ஒன்று தடுத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரான நிசாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
உலகத் தலைவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை சீனா தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது
உலகத் தலைவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை சீனா தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது

மஹில மற்றும் குமார் ஆகியோரின் விடயத்தை பொறுத்தவரை, அவர்கள் தலாய் லாமா இருப்பிடத்திற்கு விஜயம் செய்வதற்கான திட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு அவர்களுக்கு அறிவிக்குமாறு உயர் நிர்வாகத்தினரால் தமக்கு கூறப்பட்டிருந்தது என்று நிசாந்த ரணதுங்கக தெரிவித்துள்ளார்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’