
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள கொலை கொள்ளை கப்பம்கோரல் ஆட்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கென விஷேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு ஒன்று அரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவிலுள்ள பொலிஸார் 24மணிநேரமும் மோட்டார் சைக்கிள் ரோந்தில் ஈடுபடுவார்கள் என்றும் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமல் லியுகே அறிவித்துள்ளார்.
இனிமேல் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர் இவ்விடயம் குறித்து விரிவாக ஆராயும் விஷேட கூட்டம் ஒன்று இன்று தனது தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் சொன்னார். இக்கூட்டத்திற்கு வடமாகாணத்திலுள்ள சகலபொலிஸ் பிரிவு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம் மக்கள் தமக்கு நேரவுள்ள ஆபத்துகளைக் குறைக்கும்பொருட்டு அவர்கள் தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்கள் பெருந்தொகையான பணங்களை வங்கிகளிலோ அல்லது வங்கி பெட்டகங்களிளோ பாதுகாப்பாக வைக்குமாறும் நிமல் லியுகே கேட்டுள்ளார். வடமாகாணத்தை நோக்கி தென்பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் பணப்புலக்கம் காணப்படுகிறது இதனை அவதானித்த சிலரே அவற்றைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’