ஐக்கிய சோசலிச முன்னணியின் மேதின கூட்டம் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ். கிளைச் செயலாளர் திரு. குகதாசன் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதில் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியருமான விஜயகுமார் லங்கா சமசமாஜக் கட்சியின் தமிழழகன் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் (சுகு) புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். அத்துடன் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் மேதினச் செய்தியும் இங்கு வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’