ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படி வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தலைமையிலான குழு முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கென வெளிநாட்டமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கே. கம்லத் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’