இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'நாடுகடந்த தமிழீழ' அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தினை கையாள்வது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.தமது அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று வெளிவிவகார அமைச்சில் பொறுப்பேற்கும் வைபவத்தின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை நோர்வே, பிரித்தானியா, கனடா, சுவிஸ், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்து பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் முகமாக வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’