வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 மே, 2010

பாராளுமன்றம் இன்று முதல் நான்கு தினங்கள் கூடும்!// பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிவிலக்குடன் வாகனங்கள்

பாராளுமன்றத்தை இன்று (4) முதல் நான்கு தினங்கள் கூட்டுவதற்கு நேற்று நடாத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் போது இன்றும் நாளையும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

Car Clipart
பாராளுமன்றத்திற்குத் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிவிலக்குடனான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமெனப் பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜீ.ஜயசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐந்து வருடத்திற்கும் அதிகமான காலம் உறுப்பினர்களாக இருப்போருக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இந்த வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இருப்பினும் மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட போது வரிவிலக்குள்ள வாகனங்களை இறக்குமதி செய்திருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’