வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 மே, 2010

தமிழ் மொழித்திறன் போட்டிகள் மாணவர்களது உள் ஆற்றல்களை வெளிக் கொணரும் களமாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ்மொழித்திறன் போட்டிகள் மாணவர்களது உள் ஆற்றல்களை வெளிக் கொணரும் களமாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
தமிழ்மொழித்திறன் போட்டிகள் மாணவர்களது உள் ஆற்றல்களை வெளிக் கொணரும் களமாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். 

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வடமாகாண தமிழ் மொழித் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் மாகாண மட்டத்தில் நடைபெறும் இவ்வாறான தமிழ் மொழித்திறன் போட்டிகள் மாணவர்களது உள் ஆற்றல்களை வெளிக் கொணரும் களமாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது. 

கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக மாணவர்கள் தமது திறமைகளை, ஆற்றல்களை வெளிக் கொணர முடியாத நிலை இருந்தது. 

ஆனால் தற்போது அழிவு யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தனிநபராகவோ, குழுக்களாகவோ, சமூகமாகவோ தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். 

கொடிய யுத்தத்தினால் எமது மாணவர்களும், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள நிலையில் அவற்றை மீளவும் கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையில் யாழ் மாவட்ட மாணவர்கள் மாகாண, தேசிய மட்டங்களிலான தமிழ்மொழித் தின போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என கல்விச் சமூகத்தினர் என்னை அணுகிய போது எமது அமைச்சினூடாக முடிந்தளவு ஒழுங்குகளைச் செய்து கொடுத்துள்ளோம். 

தற்போதைய அமைதிச் சூழலில் அரசியல் பயணத்தில் சமநிலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தமிழ் மொழித் தின போட்டிகள் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையில் கேட்டுக் கொண்டார். 

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இராசையா உள்ளிட்ட விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழாக் குழுவினராலும் மாணவர்களாலும் கொடிபீடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

கொடிப் பீடத்தில் தேசியக் கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், மாகாணக் கொடியினை மாகாணக் கல்விப் பணிப்பாளர் இராசையாவும் ஏற்றி வைத்தனர். அதிதிகள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து அங்கு மங்கலச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டன. அரங்கில் மங்கள வாத்தியத்தை அடுத்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. 

தொடக்க நிகழ்வாக வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளினது தமிழ்த்தாய் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் நடைபெற்றன. 

மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 

இந்நிகழ்வில் கல்வித்துறை சார்ந்த உயரதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். 



























 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’