வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 23 மே, 2010

அகதி முகாம் மக்களின் உண்மை நிலைமை வெளியுலகுக்குத் தெரியாது தடுப்பதே நோக்கம் அரசின் கதவடைப்புக் குறித்துச் சம்பந்தன்


வவுனியா முகாங்களில் தடுத்து வைக் கப்பட்டுள்ள மக்களின் உண்மையான நிலைமைகள், பிரச்சினைகள் வெளியு லகுக்கு தெரிவதை தடுக்கும் நோக்கில் எம்மை அகதி முகாம் மக்களை சந்திக்கத் தடைவிதித்திருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.
வவுனியா "மனிக் பாம்' முகாமிற்குச் செல்வதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது குறித்து அவர் மேலும் தெரிவித்த தாவது:
முகாமிற்குச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங் கவின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். பத்து நிமிடத்தில் பதில் அளிப்பதாக தெரி வித்தார். பத்து நிமிட நேரத்தில் தொடர்பு கொண்டபோது அரைமணி நேரம் அவகா சத்தை அவர் கேட்டார். ஆனால் அரை மணி நேரத்தின் பின் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேற்றிரவு வரை அரசுத்தரப்பிடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.
முகாமில் உள்ள மக்களை சந்தித்து அவர் களது பிரச்சினையை அறிய நீண்டகால மாக முயற்சித்தோம்,அரசுடன் இந்த விட யத்தில் முட்டி மோதும் போக்கை நாம் கடைப்பிடிக்கவில்லை. மோதல் போக் கைத் தவிர்த்தோம்.
தேர்தல் முடிந்து மக்களின் பிரதிநிதி களாக அங்கு செல்ல முடிவு செய்த எம்மை தடுத்திருந்தது, இலங்கை அரசு தமிழர் களை எவ்வாறு நடத்துகிறது என்பதை உலகநாடுகள் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசு பழைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளதாகத் கருதினோம் ஆனால் அது பழைய நிலையிலேயே இருப்பதை உணர முடிகிறது.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் 2ஆம் தரப் பிரஜைகளாகத் தொடர்ந்து நடத்தப்படு வதையே நேற்றைய சம்பவம் உணர்த்து கின்றது என்றார் சம்பந்தன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’