வன்னிப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மீளக் குடி யேறியுள்ள மக்கள் பெரும்பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். வன்னியில் நடைபெற்ற போரின் காரணமாக தங்களின் வீடுகளை இழந்த மக்கள் மீளக்குடியேறி சிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்..
இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரண மாகப் பெய்து வரும் பெருமழையினாலும் காற்றினாலும் இந்த மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார். பலமாக வீசிய காற்றினால் கூரைகளும் கூடாரங்களும் சேதமாகியதால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த உடமைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். தப்பிப் பிழைத்த ஆவணங்களைக் கூட தங்களால் பாதுகாக்க முடியாமலிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். .தங்களுடைய கூடாரங்களுக்குள் தங்க முடி யாத மக்கள் படையினரால் கைவிடப்பட்ட காவலரண்களுக்குள் தஞ்சமடைந்து பாதுகாப் புத் தேடியுள்ளனர். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் எழுந்து இருக்கும் நிலையே தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தினாலும் காற்றினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதேச செயலர்கள் பார்வை யிட்டு அவசர உதவிகளைச் செய்து வருகின் றனர். பாதிக்கப்பட்ட மக்களை ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தமிழத்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரும் பார்வை யிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’