வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு வருமாறு இந்திய தூதுவர் அழைப்பு

கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நண்பகல் இரு தரப்பினரும் பரஸ்பரம் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்கள்.
இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கும், இந்தியத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இரு தரப்பினரும் இலங்கையின் தற் கால அரசியல், மனித உரிமை நிலைவரங் கள், தமிழர் பிரச்சினைகள் குறித்து பரஸ்பரம் உரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பின் போது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைக் கூட்டமைப்பினர் வலியுறுத்துவார்கள் என்றும் அறியப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’