வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

தடுமாறிய நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தவித்து நிற்கின்றது.

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்படாத இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.
அதற்கிணங்கக் களமிறங்கிய இந்துக் கல்லூரி அணி ஆரம்ப விக்கெட்களின் சிறப்பாட்டத்தினால் ஓட்டங்களை விரைவாக சேர்த்தது. அணி உபதலைவர் டிலுக்ஸன்இ பார்த்தீபன் ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியினை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.
இருந்தும் இறுதி விக்கெட் வீரர்கள் கைகொடுக்காததினால் 159 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தனர். துடுப்பாட்டத்தில் டிலுக்ஸன்இ பார்த்தீபன்இ பிரகாஸ்இ செந்தூரன் ஆகியோர் முறையே 35,32,21,16 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக பிரதீஸ்இ கார்த்திக் தலா 3 விக்கெட்களையும் ராகுலன் 2 விக்கெட்களையும்,ஜனுதாஸ்,சாம்பவன் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை இழந்தது. நேற்றய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை எடுத்துள்ளது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சாம்பவன் 20 ஓட்டங்களையும், ராகுலன் 8 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அணித்தலைவர் நிரூஜன் 5 விக்கெட்களையும், சிவேந்திரன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’