வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

உரிய முறையில் பணிகளை மேற்கொள்ளாத அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை - வட மாகாண ஆளுநர்


வடக்கில் இயங்கிவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிநிலைமை மற்றும் அந்த அமைப்புகள் வடபகுதி மக்களுக்கு வழங்கிவரும் நிவாரணங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின்னர் ஆராயப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு பிரதேசங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவை தமது இலக்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
உரியமுறையில் பணிகளை மேற்கொள்ளாத அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’