வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

மூன்று படிமுறைகளில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் - அமைச்சர் விமல் வீரவன்ச


அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களுடனான நீண்டநேர சந்திப்பை அடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர்,அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெரும் என்று கூறினார்.
அத்துடன், அரசியலமைப்பின் இரண்டாம்கட்ட சீர்த்திருத்தத்தின் போது, தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மூன்றாவதாகவே செனட் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த சீர்த்திருத்தங்கள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் வீரவன்ச மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’