ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்குக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஐ.தே.கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் தலைமைத்துவம் உட்பட செயற்குழுவில் மாற்றங்களும் புதிய தெரிவுகளும் இடம்பெறும்போது சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக ஏகமனதாக அல்லது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவையே நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் அங்கத்தவர்களிடையே ஒரு பொதுவான இணக்கப்பாடு காணப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’