வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்!


புதிய அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆறு பேர் இன்றைய தினம் (05) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அந்த வகையில் கெஹலிய ரம்புக்வெல புதிய ஊடகத்துறை அமைச்சராகவும் ஆறுமுகம் தொண்டமான் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராகவும் எஸ்.பி.திஸாநாயக்கா உயர் கல்வி அமைச்சராகவும் திஸ்ஸ விதாரண தொழில்நுட்பம் மற்றும் மீளாய்வு அமைச்சராகவும் பதவிப்பிரமானம் செய்தனர்.
இதேவேளை சரத் அமுனுகம நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் மேர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராகவும் மஹிந்தானந்த அளுத்கமகே இளைஞர் விவகார பிரதி அமைச்சராகவும் பைஸர் முஸ்தபா சுகாதாரத்துறை பிரதி அமைச்சராகவும் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன பௌத்த சாசனம் மற்றும் மத விவகாரங்கள் பிரதி அமைச்சராகவும் பேராசிரியர் ஜகத் பாலசூரிய தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’