அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இந்து மதத்தின் போதனைகளைச் சிறந்த முறையில் கடைப்பிடித்து வரும் போது இந்துமதம் தோன்றிய யாழ்ப்பாண மண்ணில் இந்து மத பாராம்பரியங்கள் அருகி வருவது கவலையளிப்பதாக யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
வண்ணை ஸ்ரீ காமாட்சி சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்ட சைவ சமய அறிவுப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருத்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் யாழ் முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில் பல்லவர் காலத்தில் சைவம் வைணவம் என்னும் இருபெரும் நதிகளாக இந்துமதம் வளர்ச்சி பெற்று வந்தது இந்து மத வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சைவ நாயன்மார்களையும் வைணவ ஆழ்வார்களையும் நாம் போற்றி வணங்கவேண்டும். இன்றைய இளந்தலை முறையினரிடையே அருகிவரும் இந்துப் பண்பாடு சமயப் பழக்கவழக்கங்களை நாம் போற்றிப் பாதுகாப்பதோடு இளைஞர் சமுதாயத்தை ஆன்மீக நாட்டம் உடையவர்களாக மாற்ற வேண்டும்.
இதேநேரம் முன்பள்ளிச் சிறுவர்கள் தொடக்கம் உயர்வகுப்பு மாணவர் வரை சமய அறிவை ஊட்டும் வகையில் இச் சனசமூக நிலையத்தினர் சைவசமயத் தேர்வினை நடத்தி 150 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தங்கப் பதக்கங்கள் உட்பட மிகப் பெறுமதியான பரிசில்களை வழங்கி வருவது பாராட்டத்தக்கதாகும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’