வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 15 மே, 2010

இலங்கை உட்பட்ட வெளிநாட்டவர் மீது பிரிட்டனின் புதிய அரசு கடும் நிலைப்பாடு எடுக்கும் சாத்தியம்


United Kingdom flag clipart animatedபிரிட்டனின் புதிய கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியானது குடியேற்றவாசிகளின் தொகையை வருடாந்தம் குறைப்பதென்ற தனது குடிவரவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது ஐரோப்பா தவிர்ந்த (இலங்கை உட்பட்ட) நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களும் மாணவர்களும் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலை ஏற்படும்.
கன்சர்வேட்டிவ், லிபரல் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகளே புதிய கூட்டணி அரசாங்கத்தால் உள்வாங்கப்படும்.
பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட குடிவரவுக் கொள்கையை கடைப்பிடிப்பதுவும் பிரிட்டனில் 10 வருடங்களாக வாழும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதும் லிபரல் ஜனநாயக கட்சியின் குடிவரவுக் கொள்கையாகும்.
ஆனால், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கடைசியாக இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் லிபரல் ஜனநாயக கட்சியின்குடிவரவுத்துறை தொடர்பான கொள்கை கைவிடப்பட்டிருக்கிறது.
1990 களில் இருந்த நிலைமைக்கு குடிவரவுக் கொள்கையை கொண்டுவருவதே கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கையாகும்.
பிரிட்டனில் பணியாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத பொருளாதார குடியேற்ற வாசிகளின் தொகையை வருடாந்தம் மட்டுப்படுத்தும் முறைமையை நாம் அறிமுகப்படுத்துவோம்.
குடித்தொகைப் பெருக்கத்தால் எமது அரச சேவைகள், உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படும் விளைவுகளை பரிசீலனைக்கெடுத்து இத்தொகையை மட்டுப்படுத்தும் முறைமையை அறிமுகப்படுத்துவோம்.
குடிவரவால் சமூகத்துக்கு ஏற்படும் பரந்தளவிலான மாற்றங்களை கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் மட்டுப்படுத்தப்படும் தொகை மாற்றமடையும் என்று புதிய அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர் விசா முறைமையை கடினமாக்குவதற்கு தேவையான புதிய விதிகளை அறிமுகப்படுத்துவதெனவும் புதிய அரசாங்கத்தின் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் விசா முறைமையானது எல்லைக்கட்டுப்பாட்டு முறைமையில் பாரிய துவாரமாக தற்போது இருப்பதாகவும் அக்கட்சியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமாகி பிரிட்டனுக்கு வருபவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்களாயின் ஆங்கில மொழிப் பரீட்சை அவசியமானதாக இருக்கும் என்றும் பிரிட்டிஷ் சமூகத்துடன் ஒன்றிணைவதை மேம்படுத்துவதற்காக இதனை நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவால் பிரிட்டன் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், கட்டுப்பாடற்ற குடிவரவால் அல்ல இன்றைய வாழ்வை எடுத்துப்பார்த்தால் அதாவது குடியேற்றவாசிகள் வழங்கிய பங்களிப்பைப் பார்த்தால் பொருளாதாரத்துக்கு இல்லை என்பதை காணமுடியும் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் குடிவரவுத்துறை தொடர்பான கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’