பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட வேலாயுதம் ஈஸ்வரி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு ஆடி மாதம் 17ம் திகதி செல்வி மகேஸ்வரி அவர்கள் பிறந்தார்.
இவர் சகல இன மக்களுடனும் நல்லிணக்கத்தினைக் கொண்டிருந்தார். 2004 ஆம் ஆண்டு இந்துக் கலாச்சார அமைச்சில் பணி புரிந்த காலத்தில் அவர் யுத்தத்தினால் சேதமடைந்த இந்து ஆலயங்களைப் புனரமைத்தது மட்டுமல்லாமல் இந்து மத வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். அத்துடன் இந்து சமயப் பெரியார்களினதும் மதகுருமார்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
ஆன்மீக நாட்டம் காரணமாக தனது சமயத்திற்கு மட்டுமல்ல பௌத்த கத்தோலிக்க இஸ்லாமிய சமயத்தவர்களுக்கும் பல்வேறு உதவிகளை அமைச்சின் ஊடாக மேற்கொண்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் தனது இறுதிக் காலம் வரை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரின் ஆலோசகராகப் பணிபுரிந்தார். அத்துடன் அகதிகள் நோயாளிகள் வலது குறைந்தோர் யாவருக்கும் உதவ வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தினார்.
துப்பாக்கிகளின் பாசிச அரசியலுக்கு அஞ்சாது துணிகரமாக செயலாற்றிய சமூகப்பற்றுள்ள மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது எமது தமிழினத்திற்கு ஈடுகொடுக்கப்படாத பாரிய இழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’