இலங்கையின் அனைத்து யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.
த பினன்சியல் டைம்ஸ் என்ற இணையத்தளத்துக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட போர்முறை குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.யுத்தம் நிறைவடைந்த பின்னர், அதன் காயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும், இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை முன்வைப்பதன் மூலம் அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் எத்தனை ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறைத்து, அரசாங்கத்தினால் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியுமாக இருக்கலாம்.
ஆனால் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தினால் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’