விடுதலைப்புலிகள் மீள ஒன்றுசேர்ந்து போராடும் நிலையை தடுக்கும் பொருட்டு, இலங்கையின் புலனாய்வுத்துறையை சக்திமயப் படுத்தவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் யுத்த வெற்றியை முன்னிட்டு அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக சக்திமயப்பட்டு, இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை தமதுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிப்பப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் உள்நாட்டில் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் நோக்கத்துக்காக சர்வதேச ரீதியாக செயற்பட்டு வருவதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு, இலங்கையின் புலனாய்வுத்துறையை சக்திமயப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு படையினர், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினரின் மிகச்சிறந்த சேவையினாலேயே, அவர்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு நாடுகளிலும் தற்போது செயற்பட்டு, விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’