இடம்பெயர்ந்துள்ள மக்கள் கட்டம் கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இடம்பெயர்ந்துள்ள மக்கள் கட்டம் கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இன்று (16) மாலை வலி வடக்கு மக்கள் ஒன்று திரண்டு மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய முன்றலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மக்களின் நலன்களுக்காக நாம் இணக்க அரசியலில் பிரவேசித்து அதனூடாக எமது மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள விரும்புகின்றோம். எதிர்காலத்திலும் எமது மக்கள் இரத்தம் சிந்தாமல் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தூர நோக்குடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த நிலையில் மக்களுக்கான எமது யோசனைகளை தடுத்து நிறுத்துவதற்காக பல தீய சக்திகள் தொடர்ந்தும் எம் கட்சி மீது சேறு பூசி வருகின்றன. 20 வருடங்களுக்கு முன்னர் போன்று மக்கள் கருத்துச் சுதந்திரத்துடன் கூடிய பழைய வாழ்க்கையை வாழ வேண்டும்.
இடம்பெயர்ந்து பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி புதிய புதிய தொழில்துறைகளை விருத்தி செய்து அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து பொருளாதாரத்தை பெருக்குவதற்கும் எமது அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மல்லாகம் பழம்பதி விநாயக ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்ததும் மக்கள் தமது தலைவனுக்கு மலர் மாலைகளாலும் பொன்னாடைகளாலும் நெஞ்சம் நெகிழ வாழ்த்தியும் போற்றியும் மகிழ்ந்தனர்.
மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய ஆதீனகர்த்தா நாகேந்திர சர்மா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மாவை ஆதீன கர்த்தா சண்முகநாதக் குருக்கள் ஆசியுரை வழங்கும் போது இடம்பெயர்ந்த மக்களை மீளவும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அக்கறையுடன் செயற்படுகின்றவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் என்றும் மக்களை ஏமாற்றும் விதத்தில் அரசியலில் பேச்சுக்களை பேசும் ஏனைய அரசியல் வாதிகளைப் போலல்லாமல் மக்களுக்காகவே பணியாற்றுவதே அமைச்சரின் சிறப்பான குணவியல்பு என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’