வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

சம்பந்தனின் கூற்றில் எந்தளவு உண்மை உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

create avatar
 மக்கள் வளமான வாழ்வை வாழ வேண்டும் என்பதே எமது அரசியல் அபிலாஷை என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இணுவிலில் இன்று நடைபெற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஆகியோரையும் வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த வெற்றி எமக்கானதல்ல. அது இந்த மக்களுக்கானதும் அவர்களது எதிர்கால வளமான வாழ்விற்கானதுமே என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் எமது மக்களுக்காகவே வாழ்ந்திருக்கின்றோம் என்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் மக்களுக்கான பணிகளைச் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். இன்றைய சூழ்நிலையில் எமது மக்களைத் திசை திருப்பும் வகையில் பத்திரிகைகள் பலவாறான பொய்ச் செய்திகளை பிரசுரித்து ஈ.பி.டி.பி. மீது சேறு பூசி களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஏனைய தமிழ்க் கட்சிகளைப் போன்று நாம் பொய் வாக்குறுதிகளை வழங்கியதும் கிடையாது. இனிமேலும் வழங்கப் போவதுமில்லை.
சொல்வதையே செய்வோம் செய்வதையே சொல்வோம் என்பதற்கு அமைவாக மக்களின் வளமான வாழ்வை உறுதிப்படுத்துவதே எமது அரசியல் அபிலாஷையாக உள்ளது.
இதன் காரணமாகத்தான் விருப்பு வாக்குகளில் எமக்கு அதி கூடிய வாக்குகளை பெறக் கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசுடன் பேசி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமையானது எந்தளவுக்கு உண்மை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக இணுவில் சந்தியிலிருந்து மங்கள வார்த்தியம் சகிதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் பராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஆகியோரும் அன்னங்கை வீதியூடாக மஞ்சத்தடி பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அமைச்சருக்கு பொன்னாடைகள் போர்த்தி மாலைகள் அணிவிக்கப்பட்டன.
தொடர்ந்து மஞ்சத்தடி அருணகிரிநாதன் கலையரங்கில் நிகழ்வுகள் சந்திரகாசன் தலைமையில் நடைபெற்றன.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’