வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

கெயிலின் அதிரடி ஆட்டத்தாலும், துடுப்பாட்டம் கைநழுவியதாலும் வெற்றி வாய்ப்பை இழந்தது இந்திய அணி


உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இன்று இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றின் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் சரியாக பிரகாசிக்காதமையால் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெயில் 98 ஓட்டங்களையும், சந்தரபோல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு 170 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரோஹித் ரெய்னா 32 ஓட்டங்களையும், தோனி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
அத்துடன், துடுப்பாட்டத்தில் இவ்விரு வீரர்களை தவிற வேறு எவரும் அதி கூடுதலாக ஓட்டங்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசியதுடன் போட்டியின் சிறப்பாட்டகாரராக கெயில் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி, நேற்றிரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்திய மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’