யுத்த சூழ்நிலைகளுக்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை யுனிசெப் நிறுவனத்தின் 25 மில்லியன் நிதியுதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் , டக்லஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, பஷில் ராஜபக்ஷ , உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதேவேளை 15 மில்லியன் செலவில் கட்டிட புனர்நிர்மான வேலைகளும் 10 மில்லியன் செலவில் வைத்தியசாலைக்கான உபகரணங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலைக்கென 5விசேட வாகனங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’