இலங்கையில் போரின்போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார். அந்தத் திட்டத்தை அவர் கைவிடக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம் பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாட்டைத் தேடும் முயற்சியை கைவிட வேண்டாம் என ஐ.நா.விடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டிருக்கிறது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் நியமித்திருக்கும் ஆணைக்குழுவானது சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. நாட்டில் 25 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது நிகழ்ந்தவற்றை ஆராய்வதற்கென இலங்கை அரசாங்கம் ஆணைக்குழுவை அமைத்திருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார் அந்தத் திட்டத்தை அவர் கைவிடக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
நிபுணர்கள் குழு தொடர்பாக செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நடவடிக்கை எடுக்காத தன்மையானது துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோருக்கு விடுவிக்கப்படும் சமிக்ஞையாக அமையும். உண்மையான நீதியைக் காண்பதற்கான சகல முயற்சிகளையும் தடுப்பதற்கான நடவடிக்கையாக அது அமையும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பதில் பணிப்பாளர் எலைன் பியசன் கூறியுள்ளார்.
இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழியாக சுயாதீன சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதே காணப்படுவதாக அதிகரித்து வரும் அங்கீகாரங்கள் வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’