நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பில் குழப்ப மடைய வேண்டிய அவசியமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்திற்கு உலகின் எந்தவொரு நாட்டு அரசும் ஆதரவளிக்கவில்லை. முக்கியமாக இந்த முயற்சியில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு உலக நாடுகளில் நடைபெற்று வரும் வாக்கெடுப்புகள் தொடர்பில் தூதரகங்கள் மூலம் விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில அமைப்புக்கள் வெளியிட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் எவ்வித ஆதாரங்களுமின்றி குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு அரசு முனைப்புக் காட்டும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சில அமைப்புக்கள் தொடர்ச்சியாக சுமத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’