வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 22 மே, 2010

தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட குழு : அமைச்சர் மைத்திரிபால


தொடரும் காலநிலை மாற்றத்தினால் நாட்டில் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.
நாட்டில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து அங்கு கேள்வி எழூந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொற்று நோய்த் தடுப்பு பிரிவினரது ஆலோசனைக்கமையவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு நோய்கள் தொடர்ந்தும் பரவாமல் இருக்க மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
கண்டி வைத்தியசாலையில் சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறியும் முகமாக, அவர் அங்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் புதிய அணுகுமுறையுடன் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று பொதுவாக உலக நாடுகள் எதனை எடுத்துக் கெண்டாலும் வினைத்திறனுடன் கருமமாற்றுவது அரிதாகவே உள்ளது. எமது நாட்டிலும் அந்நிலை இல்லை என்று முற்றாக மறுத்துவிட முடியாது.
சிறிதுகாலம் இவை பற்றி நாம் அவதானத்துடன் கற்றறிந்த பிறகே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.
கண்டி வைத்தியசாலையின் பெரும்பாலான காணிகளில் அத்துமீறி பலர் குடியேறியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. வெகுவிரைவில் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்படவுள்ளது" என்றார்.
அமைச்சர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கும் சென்று மகா நாயக்கர்களைத் தரிசித்து நல்லாசியும் பெற்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’