வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 22 மே, 2010

பாதிக்கப்பட்டோருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்


கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்மக்களே இந்த உதவியை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்காக பல பாரவூர்திகளில் சேகரிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுதி ஒன்று கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யு ஏ.டீ.பி லக்ஸ்மனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அன்புடன் கம்பஹா மாவட்ட மக்களுக்கு என்ற தொனிப்பொருளில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை வழங்கியமைக்காக யாழ்ப்பாண மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட பாரவூர்திகள் சில கம்பஹாவை அடைந்துள்ள நிலையில் மேலும் பல பாரவூர்திகள் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். அவையும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’