இலங்கையில் இருந்துவரும் அவசரகால சட்டத்தை நீட்டிப்பதற்கான மசோதா புதனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்; 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவசரநிலை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்ததாகத் தெரிகிறது.ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’