வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

மன்னாரில் எண்ணெய் ஆய்வு அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த


மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகள் 2011ம் ஆண்டு மே மாதமளவில் ஆரம்பிக்கப்படுமென பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் ஆரம்பக்கட்ட ஆய்வு நடவடிக்கைகள் அடுத்த வருடம் பூர்த்தியடையுமெனவும் தெரிவித்தார்.
இதன்படி இலங்கையின் வடபகுதி மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மூன்று கடற்பரப்புகளில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அவற்றுள் மன்னார் கடற்பரப்பு 8 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய ஆரம்பக்கட்ட ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகவும் ஆய்வுகளின் பின்னர் 2011 மே மாதமளவில் எண்ணெய் வள ஆய்வுக்காக கடலுக்கடியில் தோண்டப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’