வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 மே, 2010

செம்மொழி மாநாட்டுப் பணிகள் : முதலமைச்சர் கோவை பயணம்


செ‌ம்மொ‌ழி மாநா‌‌‌ட்டுப் ப‌ணிகளை நே‌ரி‌ல் ஆ‌‌ய்வு செ‌ய்வத‌ற்காக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று காலை ‌விமான‌ம் மூல‌ம் கோவை பயணமானார்.
கோயம்புத்தூர் நகரில் அடு‌த்த மாதம் 23ஆ‌ம் திகதி முதல் 27ஆ‌ம் திகதி வரை நடைபெறவிருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக 21 குழுக்களை முதலமைச்சர் கருணாநிதி அமைத்துள்ளார்.
அந்தக் குழுக்கள் சார்பில் பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை நகரில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலக செம்மொழி தமிழ் மாநாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று காலை 8.40 மணிக்கு விமானம் மூலம் கோவை செ‌ன்றா‌ர். அவருட‌ன் மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் க‌னிமொ‌ழி, உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி ஆ‌கியோ‌ர் செ‌ன்றுள்ளன‌ர்.
அங்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு விழாக்குழுத் தலைவர்களுடன், மாநாடு பற்றி இன்று காலை முதலமைச்சர் விரிவாக கலந்தாலோசித்தார்.
மாலையில், கொடிசியா அரங்குக்குச் சென்று மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணிகள் உள்ளிட்ட விழா ஏற்பாட்டுக்கான பல்வேறு பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்குவார். பின்னர், அலங்கார ஊர்தி தயாரிப்பு பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுவார்.
கோவையில் இருந்து நாளை காலை 11.00 மணியளவில் புறப்பட்டு, விமானம் மூலம் முதலமைச்சர் கருணாநிதி சென்னை திரும்புகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’