தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த தகவலை தமிழகத்தின் துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் வைத்து வெளியிட்டுள்ளார்.பார்வதி அம்மாள் அண்மையில் இந்தியாவுக்கு சிகிச்சைப்பெற சென்றிருந்த போது, அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், பார்வதியம்மாள் சிகிச்சைப்பெற விரும்பும் பட்சத்தில் தமக்கு அனுமதிக்கடிதம் அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் கடந்த தினம் ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 30ம் திகதி பார்வதி அம்மாளிடம் இருந்து இலத்திரனியல் அஞ்சல் மூலம் தமிழக முதல்வர் செயலகத்துக்கு அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இந்திய அரசாங்கம் அவருக்கு சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் என கோரி, மத்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்துக்கு மு. கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’