தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை கொட்டியது. கடந்த சில நாள்களாகத் தொடர்ந்த அடைமழையால் தெற்கில் 2 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லோலகல்லோலப்பட்டனர். நேற்று மாலைவரை பத்துப்பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந் தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற் றாக ஸ்தம்பிதமடைந்தது.
கொழும்பு,களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், காலி மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே கூடு தலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டமே அடைமழை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள் ளது. தொடர் மழை காரணமாக நேற்றும் கொழும்பின் இயல்பு வாழ்க்கை பெரு மளவுக்குப் பாதிக்கப்பட்டது.
நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. பல இடங்களில் ஓர் அடிக்கு மேல் வெள்ளம் தேங்கிநின்றது.
கொழும்பு மாவட்டத்தில் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை யால் பாதிக்கப்பட்டுள்ளன.
காலியிலும் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இதேவேளை, தொடரும் மழை காரணமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்கா பிரதான
வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாகப் பயணிகள் விமான நிலையத்தைச் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக சகல சர்வதேச விமானச் சேவைகளும் தாமதமாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலை தொடருமாம்
தற்போதைய சீரற்ற காலநிலை அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் எனக் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இவ்வார இறுதியில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகலாம் என்றும் தெரிவித்துள்ள காலநிலை அவதான நிலையம் இடி, மின்னல், மண்சரிவு, கடும் காற்று போன்றவை காணப்படலாம் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் 18 உதவி அரச அதிபர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் உள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
திருகோணமலையில்
திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவௌ, மஹிலிவுல்வௌ, நொச்சிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 200இற்கும் அதிகளவான வீடுகள் பாதிப்படைந்தன என்றும், 20 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன என்றும் தெரியவருகின்றது.
அத்தோடு குறித்த பிரதேசங்களில் மரங்கள் முறிவடைந்து மின்கம்பங்களில் வீழ்ந்தமையால் மின்சாரத் தடையும் ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் வி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’