வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 மே, 2010

நாடாளுமன்ற வளாகமும் வெள்ளத்தில்; நண்பகலுடன் அமர்வுகள் நிறுத்தம்

தற்போதைய அடைமழை காரணமாக நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வீதிகள் நீரால் மூடப் பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன்கருதி நேற்று நாடாளுமன்ற அமர்வு இடைநடுவில் ஒத்திப்போடப்பட்டது.

சில நாள்களாகப் பெய்த அடைமழை காரணமாக நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுகின்ற தியவன்ன ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து நாடாளுமன்றத்திற்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுவரை நாடாளுமன்ற வளாகத் திற்குள் உள்ள ஒரு சில வீதிகளில் நீர் நிரம் பியது. இதனால் நாடாளுமன்ற ஊழியர்களும்,
எம்.பிக்களும் அவ்வளாகத்தில் உள்ள வேறு பாதையைப் பயன்படுத்தினர்.
நேற்றுக் காலை முதல் பிற்பகல் ஒரு மணிவரை பெய்த மழையால் தியவன்ன ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் நேற்று சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை, அமைச்சர் டிலான் பெரேரா இந்த விடயத்தைப் பிரதி சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
மழை தொடர்ந்தால் நாடாளுமன்ற ஊழியர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவர். அதனால், நாடாளுமன்ற அமர்வைத் தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்று கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுக்கவேண்டும் என்று டிலான் பெரேரா கூறினார்.
இது கட்சித் தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. சந்தர்ப்பத்தைப் பார்த்து முடிவெடுக்கலாம் என்று விமல் வீரவன்ஸ அப்போது கூறினார்.
அதனைத் தொடர்ந்து அரச தரப்பு எம்.பியான விக்டர் அன்ரனி உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து சபையை ஒத்திப்போடுவதற்காகப் பிரதி சபாநாயகர் சபையோரின் இணக்கத்தைக் கோரினார்.
அரசின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தமது இணக்கத்தை வழங்கினார். இந்த மழை தொடர்ந்தால் தூர இடங்களுக்குச் செல்லவேண்டிய நாடாளுமன்ற ஊழியர்கள் பாதிக்கப்படுவர். அதனால் சபை நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்தி மறுநாள் 1.30மணிவரையும் சபையை ஒத்திவைப்போம் என்றார்.
அதன்படி சபை பிற்பகல் 1.55மணியளவில் ஒத்திப்போடப்பட்டது. நேற்றைய விவாதம் இன்று மீண்டும் தொடரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’