வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு வரும் எவரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : ஜனாதிபதி



எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு வரும் எவரையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆளும் கட்சியின் சார்பில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிடடுள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்நாள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நபர்களுக்கு பெறுமதி வாய்ந்த வாக்குகளை அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மக்கள் தமக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அப்பாவி வன்னி மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும், அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் இனவாதத்தை களைந்தெறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வேறும் பல பெயர்களில் வாக்கு கேட்டு உங்களை நாடி வருவார்கள். இவர்களிடம் ஏமாற வேண்டாம். உண்மையில் இவர்கள் உங்களையும்
எங்களையும் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’