நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியதையடுத்து அமெரிக்கா, இலங்கையிலுள்ள தூதரகத்தினூடாகத் தனது வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
அமெரிக்காவின் வாழ்த்துச் செய்தியில்,
"ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது இரட்டிப்பு வெற்றியாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாத்து, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம், இன நல்லிணக்கம் என்பவற்றை மேற்கொள்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
புதிதாகத் தெரிவாகியுள்ள அரசாங்கத்தோடு வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென நம்புகின்றோம்" " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’