வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புங்குடுதீவு சிவஸ்ரீ. ஸ்ரீநிவாஸ நாகேந்திரக் குருக்கள் காலமானார்


யாழ் புங்குடுதீவை சேர்ந்த சிவஸ்ரீ. ஸ்ரீநிவாஸ. நாகேந்திரக் குருக்கள் (சின்னமணி ஐயா) அவர்கள் காலஞ்சென்றதை அடுத்து அவர்களின் வீட்டிற்குச்சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட புங்குடுதீவு சிவன் ஆலய ஆதீன கர்த்தாவான சிவஸ்ரீ. ஸ்ரீநிவாஸ நாகேந்திரக் குருக்களின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இறுதி வணக்கம் செய்ததுடன் அவரின் இழப்பால் துருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
இவரது இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை மணற்காடு இந்து மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’