வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை திருகோணமலையில் ஆரம்பம்



கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பன்னிரண்டு பேரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருமாக பதின்மூன்று பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வாசஸ்தலத்தில் ஆரம்பமான முதலாவது பாராளுமன்றக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராசா இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் பங்குபற்றவில்லை. அவர் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் மாலையில் வந்து கூட்டத்தில் பங்குபற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காலை பத்தரை மணியளவில் ஆரம்பமான குழுவின் கூட்டம் மாலை 5 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்குபற்றும் பாராளுமன்ற உறுப்பினரிகளின் பெயர்கள் வருமாறு,

யாழ் மாவட்டம்

1. சுரேஷ் பிரேமச்சந்திரன்
2. அப்பாத்துரை விநாயகமூர்த்தி
3. ஈ. சரவணபவன்
4. எஸ்.ஸ்ரீதரன்
    மாவை  சேனாதிராசா பங்குபற்றவில்லை

வன்னி மாவட்டம்

1. செல்வம் அடைக்கலநாதன்
 2 சிவசக்தி ஆனந்தன்
 3. வினோநோகராதலிங்கம்

மட்டக்களப்பு மாவட்டம்

1. சீ.யோகேஸ்வரன்
2. பா.அரியநேத்திரன்
3. க. செல்வராசா

திருகோணமலை மாவட்டம்

1.இரா.சம்பந்தன்

அம்பாறை மாவட்டம்

1.கே.பியசேன
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’