வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

லலித் மோடியின் அலுவலகம் வருமானவரி அதிகாரிகளால் சோதனை

கொச்சி அணியின் பங்கு தாரர்களின் விவரங்களை ஐ.பி.எல். அமைப்பு தலைவர் லலித்மோடி சமீபத்தில் வெளியிட்டார். மத்திய மந்திரி சசிதரூர், அவரது காதலி சுனந்தாவுக்கு 19 சதவீத பங்கு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த பங்குகளை சசிதரூர் முறைகேடாக பயன்படுத்தி இலவசமாக வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.70கோடி.

மேற்படி விவரங்களை வெளியிட்டது தொடர்பாக லலித்மோடிக்கும், சசிரூருக்கும்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நம்பிக்கைக்குரிய தகவல்களை நிர்வாக குழுவில் ஆலோசிக்காமல் வெளியிட்டதால் லலித்மோடி மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அதிருப்தி அடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது அதிகாரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் கொச்சி அணியின் பங்குதாரரான சைலேந்திர கெயக்வட் லஞ்ச குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கொச்சி அணியில் இருந்து கெயக்வாட் விலக ரூ.200கோடி தர லலித்மோடி முன் வந்தார் என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.
4ஆவது ஐ.பி.எல். போட்டியில் புதிய 2 அணிகளாக புனே, கொச்சி அணிகள் பங்கேற்கின்றன. இதில் கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேல்டு என்ற அமைப்பு ரூ.1,500 கோடிக்கு அதிகமாகக் கொடுத்து ஏலத்தில் எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 24ஆம் திகதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூடுகிறது. அக் கூட்டத்தில் லலித்மோடியின் அதிகாரம் குறித்து விவாதிக்கப்படும். அத்துடன் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் சசாங்க் மனோகர் ஐ.பி.எல். அமைப்பின் இணை தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஐபிஎல் போட்டியின் தலைவர் லலித் மோடியின் அலுவலகம் நேற்று 3 மணியளவில் வருமான வரி அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனைக்கு பிறகு மேற்படி முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’