கிளிநொச்சி மாவட்டத்தை நேற்று முற்பகல் ஊடறுத்துச் சென்ற மினி சூறாவளி காரணமாக 88 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவிக்கையில் மினி சூறாவளி காரணமாக நான்கு கிராமங்களைச் சேர்ந்த 88 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கணேசபுரம் திருநகர் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்தவர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தற்காலிக வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வேண்டிய உடனடித் தேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’