இலங்கையில் தேர்தல் காலத்தில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட விசாரணை மட்டக்களப்பில் தொடங்கியுள்ளது.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் காலங்களில் இடம் பெற்ற வன்முறைகள் மற்றும் தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்காமல் தடுப்பதற்கு மேகொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள்,இதற்கான பின்னணிகளைக் கண்டறிவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு சனிக்கிழமை அப்பிரதேசத்திற்கு சென்று நேரடியாக விசாரனைகளை ஆரம்பித்துள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நோயல் பிரானிசிஸ் தலைமையில் நியமிக்கப்டப்டுள்ள இக் குழு 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து பாதிக்கப்டப்ட பொது மக்களிடமிருந்து வாக்கு மூலங்களை பதிவு செய்கின்றது.
முதலாம் நாள் விசாரணை மீராவோடையில் நடைபெற்ற போது பெண்கள் உட்பட 200 ற்கும் மேற்பட்டோர் சாட்சியமளிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்ததாக எமது மட்டக்களப்பு செய்தியாளர் கூறுகின்றார்.
ஏற்கனவே இரு தடவைகள் தாக்குதலுக்கு இலக்கான தனது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களினால் தனது வீடு தாக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆதரவாளரான அப்துல் காதர் மொகமட் அஸ்மீர் என்ற ஆசிரியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும் அவர் தழிழோசையிடம் தெரிவித்தார்
தேர்தல் தினமன்று வாக்களிக்கச் சென்ற தங்களை வாகனமொன்றில் வந்த குழுவினர் வாக்களிக்கச் செல்ல முடியாதவாறு வீதியில் வைத்து கலைத்ததாகவும்,இதனால் தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் பாஹிதா பாரூக் என்ற பெண் கூறுகின்றார்.
வாக்காளர்களை வாக்காளிக்காமல் தடுப்பதற்கு பொலிசாரும் துணை புரிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆதரவு சுயேட்சைக் குழுவொன்றின் தலைவரான காசிம் பாவா சாகுல் ஹமீட் பொலிசார் மீது குற்றம் சுமத்துகின்றார்.
இது தொடர்பாகவே விசேட விசாரணைக்குழுவிடம் தான் வாக்கு மூலம் அளிக்க வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாம் நாள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பானவர்களே வாக்கு மூலம் அளிக்க இந்த விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்கள்
முதலாம் நாள் விசாரணைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எவரும் சமூகமளிக்காமை குறித்து அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மொகமட் கணி மொகமது லெப்பை தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
அடுத்த இரு தினங்களில் தமது கட்சி ஆதரவாளர்களின் முறைப்பாடுகளை இக்குழு பதிவு செய்யவிருப்பது பற்றி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நோயல் பிரான்சிஸ் தன்னிடம் தெரிவித்ததாகவும் மொகமது லெப்பை கூறுகிறார்.
ஏற்கனவே தங்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை தொடர்பாக பொலிசில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’