வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஐ.ம.சு.மு. புதிய உறுப்பினர்கள் - ஜனாதிபதி ஞாயிறன்று சந்திப்பு : ததேகூவும் ஒன்று கூடும்

 ஏழாவது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருக்கின்றார். 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே ஜனாதிபதி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

aதேவேளை, தமிழ்th தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி கலந்துரையாடவிருக்கின்றனர்.
இந்தச் சந்திப்பு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் நடைபெறும் என்றும் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’