இந்தியாவின் கொச்சி சிறையில் கடந்த 19 மாதங்களாக இருந்த இலங்கை படகோட்டிகள் 5 பேர் கடந்த புதன்கிழமை நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் 5 பேரும் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்திய கடற்பரப்பில் வைத்து படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்துக்குரிய படகில் இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 19 மாதங்களின் பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் கொச்சி நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது அவர்கள் அனைவரையம் நாடுகடத்துமாறு உத்தரவு பிறக்கப்பட்டது.
அத்துடன் 55 லட்சம் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’