வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 ஏப்ரல், 2010

மன்னார் பேசாலையில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்

மன்னார் பேசாலைப் பகுதியில் சற்றுமுன்னர் (மாலை 4.30 மணியளவில்) இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் சம்பவம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது லக்ஷ்மன் (வயது 24) என்பவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பேசாலை கிராம அலுவலகர் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் அவ்விடத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’