போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் இன்னும் ஆறு மாத காலத்தினுள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவியேற்றுள்ள மில்ராய் பெர்னாண்டோ தெரிவித்திருக்கின்றார்.
வவுனியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு ஒரு சிலருக்கு மாத்திரமே கிடைத்திருக்கின்றது. பலருக்குக் கிடைக்கவில்லை.
பல வீடுகள் முற்றாக அழிந்திருப்பதனால், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் தற்காலிக வீடுகளில் மூன்று நான்கு குடும்பங்களாகச் சேர்ந்து வசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் புதிய வீடுகளை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணி வெடியகற்றும் வேகத்திற்கு ஏற்ப மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ளவர்களின் பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்குமானால், நாளையே இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் மீள்குடியேற்றம் செய்துவிட முடியும் |
மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்களின் இழப்பீடுகள், வீடமைப்பு மற்றும் தொழில் முயற்சிகளுக்கான விடயங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
இதற்கிடையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்து கடந்த இரு தினங்களில் நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’