வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஏப்ரல், 2010

கொழும்பில் பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்தள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து தனது பணிகளை அவர் ஆரம்பித்தார்.
அதன் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தான் பொறுப்பேற்றுள்ள அமைச்சின் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உயர் பங்களிப்பை வழங்குவதுடன், 10 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேவேளை, புனர்வாழ்வு முகாம்களில் உள்ள வட மாகாணத்தைச் சேர்ந்த 11 ஆயிரம் வட மாகாண இளைஞர், யுவதிகளின் விடுதலையின் பின்னர் அவர்களுக்கான கைத்தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’